இறால் பிரியாணி (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இரால் - 1/2 கிலோ

பாஸ்மதி அரிசி - 2 ஆழாக்கு (ஊறவைத்தது)

எண்ணெய் - தேவையான அளவு

கருவா - 3

ஏலம் - 3

கிராம்பு - 3

புதினா - 1/2 கட்டு

வெங்காயம் - 200 கிராம்

தக்காளி - 200 கிராம்

இஞ்சி விழுது- 2 தேக்கரண்டி

பூண்டுவிழுது - 2தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 4

மசாலாதூள் - 3 தேக்கரண்டி

தனியா தூள் - 3 தேக்கரண்டி

எழுமிச்சை பழம் - பாதி

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - சிறிது

செய்முறை:

முதலில் வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பச்சைமிளகாயை இரண்டாக கீறிவைக்கவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு போட்டு பாதி புதினா இலையை போட்டு வதக்கி (மீதியை தனியே வைக்கவும்) பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.பின் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

பின் தக்காளி,பச்சைமிளகாயை போட்டு வதக்கி இராலை போட்டு நன்கு வதக்கவும்.

பின் மசாலாதூள்,தனியாதூள்,போட்டு வதக்கி ஊறவைத்த அரிசியை போட்டு நன்கு கிளறி 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொஞ்சம் புதினா போட்டு மூடிவிடவும்.

சிறிது நேரம் கழித்து கிளறி எழுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றி மீதம் உள்ள புதினாவை போட்டு கிளறி 10 நிமிடம் தம்மில் போட்டு தீயை மிதமானதாக வைக்கவும்.

வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

குறிப்புகள்: