இறால் பிரியாணி (3)

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்

இறால் - 2 1/2 கப்

தக்காளி - 4

வெங்காயம் - 3

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி

புதினா - 2 கொத்து

நெய் - 1/4 கப்

கறி மசாலா - ஒரு மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி + அரை தேக்கரண்டி

சீரக தூள் - அரை மேசைக்கரண்டி

சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - அரை கப்

பட்டை - 1

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

தேங்காய் துருவல் - 2 கப்

லெமன் மஞ்சள் பவுடர் - ஒரு சிட்டிகை

உப்பு - 2 1/2 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.

சாதத்தை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், போட்டு 30 நொடி வதக்கி விட்டு வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

அதில் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு எல்லாவற்றையும் 5 நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை போகும் வரை வதக்கி விட்டு நெய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

அதனுடன் எல்லா தூள் வகைகளையும் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

பிறகு இறால், கொத்தமல்லி தழை, உப்பு போட்டு நன்கு பிரட்டி விடவும்.

3 கப் பால் ஊற்றி கிளறி விட்டு தட்டை வைத்து மூடி கொதிக்க விடவும்.

வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு கிளறி தட்டை வைத்து மூடி மேலே கனமான பொருளை வைத்து 10 நிமிடம் தம்மில் வைக்கவும்.

10 நிமிடம் கழித்து இறக்கி வைத்து மேலே நெய் ஊற்றி கிளறி விடவும். சுவையான இறால் பிரியாணி ரெடி. இந்த குறிப்பினை நமக்கு வழங்கியவர் திரும்தி. சல்மா பானு ஹசன் அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: