இடியாப்ப பிரியாணி

on on on on off 6 - Great!
4 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் - 10

கொத்துக்கறி - 200 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 2

தேங்காய் பால் - 1 கோப்பை

இஞ்சி பூண்டு விழுது - 1 கரண்டி

கேரட் - 2

வேகவைத்த பட்டாணி - ஒரு கோப்பை

கரம் மசாலாத்தூள் - 1 கரண்டி

மிளகாய்தூள் - 1 கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

முட்டை - இரண்டு

எண்ணெய் - 5 கரண்டி + 3 கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கறியை இஞ்சி பூண்டு விழுது, மசாலாத்தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்

கேரட்டை துருவியில் துருவிக் கொள்ளவும்.

இடியாப்பத்தை தேங்காய்ப்பாலை ஊற்றி உதிர்த்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும். பின் அதில் கேரட், பட்டாணியை போட்டு இரண்டு நிமிடம் போட்டு வதக்கவும்.

பின் மிளகாய்தூள், மஞ்சள்தூளை போட்டு கிளறி கறியை போட்டு மூன்று நிமிடம் கழித்து உதிர்த்து வைத்த இடியாப்பத்தை போட்டு நன்கு கிளறி முட்டையை தனியாக வேறு சட்டியில் ஊற்றி பொரித்து அதன் மேலே போட்டு மல்லிக்கீரை தூவி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: