ஆம்பூர் பிரியாணி (2)

on on on on off 7 - Great!
4 நட்சத்திரங்கள் - 7 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒரு கிலோ

ஆட்டுக்கறி - ஒன்றரை கிலோ

தக்காளி - அரை கிலோ

வெங்காயம் - அரை கிலோ

பச்சைமிளகாய் - 200 கிராம்

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 3

ஏலக்காய் - 3

ரம்பைஇலை - துண்டு

அன்னாசிப்பூ - ஒன்று

ஜாதிப்பூ - ஒன்று

மல்லி - ஒரு கட்டு

புதினா - ஒரு கட்டு

தயிர் - 250 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது - 300 கிராம்

எலுமிச்சைப்பழம் - இரண்டு

நெய் - 100 கிராம்

எண்ணெய் - 100 கிராம்

உப்பு - ஒரு கரண்டி

செய்முறை:

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

கறியை சுத்தம் செய்து துண்டுகள் போட்டு தயிரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்.

அரிசியை ஒன்றுக்கு ஒன்று தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், இலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி கறியை போட்டு கிளறி இஞ்சி பூண்டு விழுது, புதினா, மல்லிக்கீரையை போட்டு கிளறி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கறியை நன்கு வேக வைக்கவும்.

கறி வெந்ததும் வேகவைத்த அரிசியை போட்டுக்கிளறி பத்து நிமிடம் தம்மில் போட்டு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

குறிப்புகள்: