ஆம்பூர் சிக்கன் பிரியாணி

on on on on off 6 - Great!
4 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 500 கிராம்

சிக்கன் - 650 கிராம்

வெங்காயம் - 3

தக்காளி - 3

தயிர் - 1/2 டம்ளர்

இஞ்சி, பூண்டு விழுது - 4 மேசைக்கரண்டி

புதினா - ஒரு கட்டு (அல்லது) தேவையான அளவு

கொத்தமல்லி - ஒரு கட்டு (அல்லது) தேவையான அளவு

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - 1 1/4 தேக்கரண்டி

எலுமிச்சை - பாதி

கலர் பவுடர் - சிறிது

பட்டை - ஒரு இன்ச் அளவு இரண்டு

கிராம்பு, ஏலம் - தலா 2

எண்ணெய் - கால் டம்ளர்

நெய் - கால் டம்ளர்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். அரிசியை களைந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

சிக்கனை சுத்தம் செய்து அதில் பாதி தயிர் சேர்த்து கிளறி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

சிக்கனை போட்டு கிளறி தயிர், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

பின் கலர் பொடி, வெங்காயம், தக்காளி சேர்த்து கிளறி விட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.

நன்கு வெந்து எண்ணெய் முழுவதும் மேலே மிதந்து வரும் போது இறக்கி விடவும்.

தண்ணீரை கொதிக்க விட்டு களைந்து வைத்துள்ள அரிசியை போட்டு அதனுடன் ஒரு பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு முக்கால் வேக்காடு வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய், சிறிது உப்பு சேர்க்கவும்.

வெந்ததும் சாதத்தை வடிகட்டியில் வடிக்கவும்.

இறக்கி வைத்துள்ள கிரேவியில் வெந்த சாதத்தை சேர்த்து கிளறி சமப்படுத்தி குறைந்த தணலில் 5 நிமிடம் அடுப்பில் வைக்கவும். பின் சிம்மில் வைத்து, தோசை தவாவில் 20 நிமிடத்திற்கு தம் போடவும். சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணி தயார்.

குறிப்புகள்:

தயிர் சட்னி, எண்ணெய் கத்தரிக்காயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.