அஞ்சப்பர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 1 பெரியது
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 2 பெரியது
பச்சைமிளகாய் - 4 – 5
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
எண்ணெய் – 2 மேஜை கரண்டி
நெய் – 2 மேஜை கரண்டி
---------------------
கடைசியில் சேர்க்க :
-----------------------
புதினா – 1 கைபிடி அளவு
கொத்தமல்லி – 1 கைபிடி அளவு
எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
-------------------------------
சேர்க்க வேண்டிய தூள் வகைகள்
-------------------------------
மிளகாய் தூள் – 1 மேஜை கரண்டி
உப்பு – தேவையான அளவு
------------------
முதலில் தாளிக்க
------------------
பட்டை- 1 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
செய்முறை:
வெங்காயம்+ தக்காளியினை நீளமாக வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக வெட்டவும். புதினா + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து அத்துடன் 1/2 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் மீதம் உள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி + பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக கரைந்தவுடன், ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து வேகவிடவும்.
சிக்கனை பாதி வெந்தவுடன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். ( 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)
ஒரு பாத்திரத்தில் 1 மேஜை கரண்டி நெய் ஊற்றி ஊற வைத்து அரிசியினை நன்றாக கழுவி தண்ணீர் வடித்து கொண்டு நெயில் 1 – 2 நிமிடங்கள் வதக்கவும்.
ரைஸ் குக்கரில் அரிசி + சிக்கன் கலவை + புதினா, கொத்தமல்லி சேர்த்து 15 - 20 நிமிடங்கள் வேகவிடவும். (குறிப்பு : பிரஸர் குக்கர் என்றால் 1 விசில் வரும் வரை வேகவிடவும்.)
கடைசியில் எலுமிச்சை சாறு பிழிந்து மேலும் இருக்கும் 1 மேஜை கரண்டி நெய் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். சுவையான பிரியாணி ரெடி
குறிப்புகள்:
சமைக்க தேவைப்படும் நேரம் : 40 – 50 நிமிடங்கள்
கண்டிப்பாக நன்றாக பழுத்த தக்காளி சேர்க்க வேண்டும்.
பிரியாணியில் சேர்க்க வேண்டாம். சிக்கனை தண்ணீரில் கழுவும் பொழுது மஞ்சள் தூள் சேர்த்து கழுவி கொள்ளவும்.
சமைக்கும் முன்பு 1 மேஜை கரண்டி நெயில் சுமார் 1 – 2 நிமிடங்கள் வறுத்து எடுக்க வேண்டும். அப்பொழுது தான் சாதம் நன்றாக இருக்கும்.
பொதுவாக சிக்கனுடன் சேர்த்து வதக்கிவிடுவோம். ஆனால் இந்த பிரியாணில் அரிசி சேர்க்கும் பொழுது தான் புதினா, கொத்தமல்லியினை சேர்க்க வேண்டும்.
இந்த பிரியாணியில் தயிர் சேர்க்க தேவையில்லை.