ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
முந்திரி, பாதாம் - தலா 8
அன்னாசிப்பழம், ஆப்பிள் - தலா ஒரு துண்டு
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று
பச்சை மிளகாய் - 3
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (2 டீஸ்பூன் பாலில் கரைத்துக்கொள்ளவும்.
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். பாதாம், முந்திரியை மெல்லியதாக, நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
அன்னாசிப்பழம், ஆப்பிளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் சர்க்கரையை சேர்க்கவும்.
சர்க்கரை கரைந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு பாதாம், முந்திரி சேர்த்து வறுக்கவும்.
இதனுடன் வடித்த சாதம், பழத்துண்டுகள் சேர்த்து நன்கு கிளறி, பாலில் கரைத்த குங்குமப்பூ, தேவையான உப்பு சேர்த்து மேலும் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.