1கத்தரி வாழை புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 200 கிராம்
வாழைக்காய் - 1
சின்ன வெங்காயம் - 1/2 கப்
பூண்டு - 8 பல்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
வெல்லத் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காய் மற்றும் வாழைக்காயை நீளமாக நறுக்கி தனித்தனியாக மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரை கப் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம் தாளித்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, மிளகாய் தூள் சேர்த்து பிரட்டவும்.
பிறகு புளிக்கரைசல், அரை கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
புளிக் கரைசலின் பச்சை வாசனை போனதும் பொரித்து வைத்துள்ள காய்கள் மற்றும் வெல்லத் தூள் சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.