ஸ்பெஷல் தக்காளி குழம்பு
தேவையான பொருட்கள்:
புளி - சின்ன உருண்டை(எலுமிச்சை அளவு)
தக்காளி - 8
சிவப்பு மிளகாய் பொடி - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
வெந்தய பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சின்ன தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 டீ தேக்கரண்டி
செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும்.
கடுகு சேர்த்து வெடித்தவுடன் பெருங்காயம் பொடி,, வெந்தய பொடி,
கறிவேப்பிலை சேர்க்கவும்.
தக்காளியை நன்றாக பொடி பொடியாக நறுக்கி அடுப்பில் போட்டு வதக்கவும்.
உப்பு, மஞ்சள் பொடி,மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்.
அடுப்பை நிதானமாக எரிய விடவும்.
தக்காளி நன்றாக வதங்கி பேஸ்ட் போல ஆனவுடன் புளியை கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.
பதினைந்து நிமிடங்கள் நன்றாக கொதித்த பின்
எண்ணெய் மேலே கசிந்து வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சூடாக இட்லி வார்த்து உடனே இந்த குழம்பை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.