வெள்ளைக்கறி





தேவையான பொருட்கள்:
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
கத்தரிக்காய் - 2
அவரைக்காய் - 3
முருங்கைக்காய் - 1
வறுத்து அரைக்க:
சிவப்பு மிளகாய் - 4 - 5
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய்ப் பூ - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வெள்ளைப் பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 6 அல்லது 7
உப்பு - சுவைக்குத் தகுந்தபடி
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் - சிறிது
செய்முறை:
புளியைக் கரைத்துக் கொள்ளவும். காய்களை நீளவாக்கில் நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், சிவப்பு மிளகாய், இவற்றை லேசாக வறுத்து, அரைக்கவும்.
இத்துடன் தேங்காய்ப் பூ, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வெந்த காய்களுடன், கரைத்த புளித் தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி வர விடவும்.
பின் அரைத்து வைத்துள்ளதையும் கரைத்து ஊற்றி மீண்டும் ஒரு கொதி வர விடவும்.
இறக்கி வைத்த பின், நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து குழம்பில் சேர்த்து பரிமாறவும்..