வெள்ளரிக்காய் புளிக்கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய மஞ்சள் நிற வெள்ளரிக்காய் - 1

புளி எலுமிச்சை அளவு

அரைப்புக்கு:

தேங்காய் - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 1/4 கப்

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்த்தூள் - சிட்டிகை

சீரகத்தூள் - சிட்டிகை

மிளகு - 1/4 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணை, கடுகு, வெந்தயம், கறிவைப்பிலை - சிறிது

நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/4 கப்

செய்முறை:

அரைப்புக்கு தேவையானதை நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

வெள்ளரிக்காயை 1 கப் நீரில் வேகவிடவும்.

பின் பாதி வெந்ததும் புளிதண்ணீர் சேர்க்கவும்.பச்சை வாசம் போக கொதித்ததும் வெந்த காயில் அரைப்பை போட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

பின் அடுப்பிலிருந்து இறக்கி தாளிப்புக்கு தேவையானதை தாளித்து குழம்பில் கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: