வெந்தய குழம்பு (புதிய முறை)
1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 5
தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரன்டி
ஜீரகத்தூள் - 1 தேகரண்டி
கடுகு, உளுந்து - சிறிது
தண்ணீர் - 3/4 கப்
வெந்தய பொடி - 1/2 தேகரண்டி
நல்ல எண்ணை - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயம்,பூண்டை தோல் உரித்து வைக்கவும்
தக்காளி,மிளகாய்த்தூள்'மல்லித்தூள்,ஜீரகத்தூள் ஆகியவற்றை மிக்சியில் விழுதாக அரைக்கவும்
வாணலியில் எண்ணை ஊற்றி,கடுகு,உளுந்து தாளிக்கவும்
பின்னர்,வெங்காயம்,பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
இதில் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்
எண்ணை பிரிந்ததும்,3/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
குழம்பு கெட்டியானதும் 1/2 தேக்கரண்டி வெந்தய பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.