வெந்தய குழம்பு

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெந்தயம் - 4 தேக்கரண்டி

வரமிளகாய் - 4

மல்லி - 3 தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - பத்து

பூண்டு - 8 பல்

புளி - ஒரு எலுமிச்சபழ அளவு

தேங்காய் துருவல் - அரை கப்

கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை உரித்து வைக்கவும்.

வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.

வரமிளகாய், மல்லி, சீரகம் இவை மூன்றையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்தவற்றை அரைக்கவும். தேங்காயை தனியாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நான்கு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். ஊற வைத்த வெந்தயத்தை வடிகட்டி வாணலியில் போட்டு வதக்கவும்.

வதங்கியதும் நறுக்கின வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்..

அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதினை போட்டு வதக்கவும்.

அடுத்து அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்க்கவும்.

புளியை கரைத்து ஊற்றி உப்பு சேர்க்கவும். அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடவும். எண்ணெய் தெளிந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: