வெந்தயக் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெந்தயம் - 2 மேசைக்கரண்டி

புளி - 20 கிராம்

தேங்காய் துருவல் - 40 கிராம்

சின்ன வெங்காயம் - 50 கிராம்

செத்தல் மிளகாய் - 5

மல்லி - 1 மேசைக்கரண்டி

நற்சீரகம் - 1 தேக்கரண்டி

பூண்டு - 8 பற்கள்

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு நெட்டு

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெந்தயத்தை 10 மணி நேரம் ஊற வைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

செத்தல் மிளகாய், நற்சீரகம், மல்லியை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் தேங்காய் துருவலை அரைத்து எடுக்கவும்.

வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

அதில் வெந்தயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு நறுக்கின வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் மல்லி, மிளகாய் விழுதை போட்டு பிரட்டி விடவும்.

அதனுடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து பிரட்டவும்.

புளியுடன் 300 மி.லி தண்ணீர் ஊற்றி கரைத்து பிரட்டி வைத்திருக்கும் மசாலா கலவையில் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் கறிவேப்பிலையை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து ஏதேனும் ஒரு பொரியல் வகையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.