வெந்தயக் குழம்பு

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெந்தயம் - 3 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 5

பச்சை மிளகாய் - 1

பெருங்காயம் - 3 சிட்டிகை

பெரிய வெங்காயம் - 1

தாளிக்கும் கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

கடுகு - தாளிப்பதற்கு

புளி - பெரிய எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை மூன்று டம்ளர் சுடு நீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் கடலைப்பருப்பு சேர்க்கவும்.

கடலைப்பருப்பு சிவந்ததும் பெருங்காயத்தை பொரிய விடவும்.

வெந்தயம் சேர்த்து லேசாக வதக்கவும்.

வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி மிளகாய் வற்றல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கரைத்து வைத்துள்ள புளியை சேர்க்கவும். அதில் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து எண்ணெய் குழம்பின் மேல் தெரிந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: