வெண்டைக்காய் மோர் குழம்பு (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரைக்க:

கடலை பருப்பு - 2 தேக்கரண்டி

அரிசி - 2 தேக்கரண்டி

தேங்காய் - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1 தேக்கரண்டி

கலக்க:

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மோர் - 3 கப்

தண்ணீர் - 3 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

வெண்டைக்காய் - 3

செய்முறை:

முதலில் கடலை பருப்பையும், அரிசியையும் பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

ஊறவைத்த அரிசி கடலைப்பருப்புடன், தேங்காய், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி ஒரு வாணலியில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கவும்.

கடைசியில் சீரகத்தை சேர்த்து அடுப்பை அனைத்து விட்டு ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு அரைக்கவும்.

அரைத்ததில் மேலும் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி, உப்பு போட்டு ஒரு கலக்கு கலக்கி கொதிக்க விடவும்.

கொதிக்கும் போது பொங்கும், தீயை சிம்மில் வைத்து நல்ல கிளறி கிளறி விடவும்.

கொதித்ததும் மூன்று கப் மோரை அதில் ஊற்றி உடனே அடுப்பை ஆஃப் பண்ணவும்.

கடைசியில் வெண்டைக்காயை இரண்டாக அரிந்து எண்ணெயில் வதக்கி போடவும்.

அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். அதை கொதிக்கும் குழம்பில் ஊற்றி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: