வெண்டைக்காய் மோர் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - சிறிது

வெங்காயம் - 1

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தயிர் - 1 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

பச்சரிசி - 2 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் (அல்லது) மிளகாய் வற்றல் - 3

சீரகம் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

உளுந்து - 1/4 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

1/2 கப் தயிரை 1/2 கப் நீர் விட்டு மோர் ஆக்கவும்.

அரிசி, பருப்பு ஊர் வைத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளித்து, வெங்காயம், வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.

பின் மோர், அரைத்த மசாலா, தேவைக்கு நீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்து காய் வெந்ததும் எடுத்து ஆர விடவும். பின் தயிர் சேர்த்து கலக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: