வெண்டைக்காய் புளிக்குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 150 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 4

பச்சைமிளகாய் - 4

புளி - சிறிய உருண்டை

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை அரை மணி நேரம் ஊறவைத்து ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். அதனுடன் வெண்டைக்காயை போட்டு குறைந்த தீயில் வதக்கவும்.

பின் தக்காளி, உப்பு, மிளகாய் தூள், தனியாதூள் போட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.

பிறகு புளிக்கரைச்சல் சேர்த்து வெண்டைக்காய் வேகும் வரை கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியான பின் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: