வெண்டைக்காய் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1/2 கப்

வெட்டிய வெங்காயம் - 4 அல்லது 5 மேசைக்கரண்டி

வெட்டிய உள்ளி - 4 மேசைக்கரண்டி

புளி - நெல்லிக்காயளவு

தேங்காய்ப்பூ - 1/4 கப்

பெரிய சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கறித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 1 நெட்டு

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காயை 1" துண்டுகளாக வெட்டவும்.

புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

தேங்காய்ப்பூவைப் பிழிந்து முதலாம், இரண்டம் பால் எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெண்டைக்காய் துண்டுகளை சிவக்க பொரித்து(deep fry) எடுக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அதனுள் வெங்காயம், உள்ளி, கடுகு, பெரிய சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் வெந்தயம், பொரித்த வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் புளிக்கரைசல், இரண்டாம் தேங்காய்ப்பால், கறித்தூள், உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் தேங்காய் முதற்பாலை விட்டு கலக்கி மீண்டும் கொதிக்க விடவும்.

குழம்பு ஓரளவு தடிப்பானதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனை சோறு, இடியப்பம், புட்டு என அனைத்து உணவுகளுடனும் பக்க உணவாக சாப்பிடலாம்.