வெஜ் சால்னா





தேவையான பொருட்கள்:
தக்காளி - 5
பொடியாக நறுக்கிய கேரட் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
நறுக்கிய உருளைக்கிழங்கு - 1/2 கப்
லவங்கம் - 4
ஏலக்காய் - 3
பட்டை
பச்சை மிளகாய் - 3
முந்திரி - 10
சோம்பு - 5 கிராம்
சீரகம் - 5 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1 கப்
கசகசா - 5 கிராம்
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, கருவேப்பிலை (விரும்பினால்) - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காய், கசகசா, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், பச்சை மிளகாய், அனைத்தையும் சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
முந்திரி'ஐ ஊறவைத்து அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
வெட்டி வைத்த காய்கறிகள் போட்டு, அரைத்த தேங்காய் மசாலா ஊற்றி வதக்கவும்.
பின் தேவையான அளவு தண்ணீர், தனியா தூள், முந்திரி விழுது சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
காய்கறிகள் வெந்ததும், உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி பரிமாறவும்.