வெஜிடேரியன் காளான் குழம்பு
தேவையான பொருட்கள்:
பட்டன் மஷ்ரும் (காளான்) - 10
சோம்பு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பட்டை, இலவங்கம், அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தேங்காய் பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
மல்லி பொடி - 3 தேக்கரண்டி
கறிமசால் பொடி - 1 தேக்கரண்டி
கரம்மசால் பொடி - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காளான் துண்டுகளை வெட்டி கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை, இலவங்கம், அன்னாசிப்பூ, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.
பச்சைமிளகாய் போட்டு வதக்கிய பின் தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும். பின் மஸ்ரும் துண்டுகளை போட்டு வதக்கி அதனுடனே கரம் மசால் தவிர மற்ற பொடிகளை போட்டு எண்ணெயிலேயே வதக்கி, பின் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்கவிடவும்.
குழம்பில் எண்ணெய் மிதக்கும்வரை கொதிக்கவிட்டு கெட்டியானவுடன், கரம் மசால் பொடி தூவி, தேங்காய் பால் பவுடரை 1/2கப் வெந்நீரில் கட்டியில்லாமல் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.