வெங்காய பூண்டு குழம்பு

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 1 கப்

பூண்டு - 1/2 கப்

புளி - ஒரு பெரிய எலுமிச்சையளவு

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயம், பூண்டு, தக்காளியை சிறு துண்டுகளாக அரிந்துக் கொள்ளவும்.

புளியை ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.

அதனுடன் வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் தாளிக்கவும். பிறகு அதனுடன் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

இரண்டும் நன்கு வதங்கியவுடன் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி கரையும் வரை கிளறவும். பின்பு அதனுடன் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்பு அதனுடன் கரைத்து வைத்த புளி கரைசலை சேர்க்க வேண்டும்.

புளி கரைசல் கொதித்து, வற்றி அனைத்தும் சேர்ந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: