வெங்காய குழம்பு
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 2 கோப்பை
தக்காளி - 3
பூண்டு - 1 கோப்பை
புளி - இரண்டு எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 2 குழிக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு ஆர்கு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
செய்முறை:
பூண்டு வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
தண்ணீரில் புளியை தக்காளியுடன் சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.
ஆறிய புளி மற்றும் தக்காளியை கரைத்து அதனுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம் தாளித்து சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு வெங்காயம், பூண்டு சேர்க்கவும்.
பூண்டு மற்றும் வெங்காயத்தை குறைந்த தணலில் வைத்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பூண்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.
பின் கரைத்து வைத்திருக்கும் கலவையை இதனுடன் சேர்த்து மிளகாய்தூள் வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விடவும் .(குறைந்தது 15 நிமிடம்) கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றி பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூடான சுவையான வெங்காய குழம்பு.
இக்குழம்பில் தேங்காய் சேர்க்காததால் மூன்று நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.
தோசைக்கும் சுவையாக இருக்கும்.