வாழைப்பூ குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 5 அல்லது 6 இதழ்கள்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 8 பல்

தனி மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி + 1/2 மேசைக்கரண்டி

மல்லி தூள் - 1 1/2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 3/4 தேக்கரண்டி

கடலை மாவு - 1/2 கப்

அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.

புளியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.

வாழைப்பூவை சுத்தம் செய்து அதில் உள்ள அந்த ஜவ்வு மற்றும் காம்பை நீக்கி விடவும்.

சுத்தம் செய்த வாழைப்பூவை தண்ணீரில் அலசி விட்டு அப்படியே இட்லி தட்டில் வைத்து ஆவியில் அவித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரை மேசைக்கரண்டி மிளகாய் தூள், 2 சிட்டிகை உப்பு போட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

அதில் வேக வைத்த வாழைப்பூவை போட்டு தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு போட்டு தாளித்துக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

அதனுடன் தக்காளியை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு போட்டு மேலும் அரை கப் தண்ணீர் ஊற்றி மிளகாய் வாடை போக கொதிக்க விடவும்.

கொதித்ததும் இறக்கி வைத்து விடவும். பரிமாறும் முன் பொரித்து எடுத்து வைத்திருக்கும் வாழைப்பூவை போட்டு கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: