வாழைக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1 அல்லது 2
பூண்டு - 5 அல்லது 6 பல்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி
புளி - சிறிதளவு
வறுத்து அரைக்க:
தனியா - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வறுக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும். இதனை தேங்காய் துருவலுடன் அரைத்து வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைக்காய் சேர்த்து வதக்கவும்.
இப்போது மிளகாய் தூள், அரைத்த விழுது மற்றும் தேவையான புளி தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். உப்பு சரிப்பார்க்கவும்.
வாழைக்காய் வெந்து, எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை நிறுத்தி விட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
விரும்பினால் மிளகாய் தூளுக்கு பதில் காய்ந்த மிளகாயை வறுத்து அரைத்தும் சேர்க்கலாம். அரைக்கும் விழுது நைசாக இருக்க வேண்டும்.
இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.