வற்றல் குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
மாவற்றல் (அல்லது) கத்தரி வற்றல் - 5
கொத்தவரை வற்றல் - 6
வத்தக்குழம்பு பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல் (இருந்தால்)
பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கிளாஸ் அளவு வெந்நீரில் வற்றலை ஊறவைத்து பிழிந்து எடுக்கவும். புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், வெந்தயம் தாளித்து முழு வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி வற்றல் குழம்பு பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு சிறு தீயில் வதக்கவும்.
புளியை ஊற்றி வற்றலை போடவும். கொதித்து குழம்பு வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கி பரிமாறவும்.