வற்றல் குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
மாவற்றல் - 5
கத்தரி வற்றல் - 10
கொத்தவரை வற்றல் - 12
சுண்டைக்காய் வற்றல் - சிறிது
வெங்காயம் - 1 (அல்லது) 10 சின்ன வெங்காயம்
பூண்டு - 10 பல்
வற்றல் குழம்பு பொடி (அல்லது) மிளகு சீரகப் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் பால் - 1 கப்
வடகம் - சிறிது
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அனைத்து வற்றலையும் ஊறவைக்கவும்.
வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து, அதனுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வடகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் வற்றல் குழம்பு பொடி, மற்ற தூள் வகைகள் சேர்த்து சிறு தீயில் வைத்து வதக்கவும்.
அதனுடன் ஊறவைத்த வற்றலைப் பிழிந்துவிட்டு போட்டு சுருள வதக்கவும்.
பிறகு தேங்காய் பால் மற்றும் புளிக்கரைசல் ஊற்றி கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து கெட்டியாகி எண்ணெய் மேலே வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். (விரும்பினால் அவித்த முட்டை சேர்க்க்லாம்).