வற்றல் குழம்பு
தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய் வற்றல் - ஒரு கைப்பிடி
வெங்காயம் - 2
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
பூண்டு - ஒன்று
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி வற்றலை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும்.
வாணாலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
வெங்காயம், பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் வறுத்து வைத்துள்ள வற்றலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.