வறுத்த பருப்பு குழம்பு (1)
0
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - 10 இலை
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை வறுத்து கொள்ளவும்.
பிறகு அதில் பருப்பு போட்டு வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன், பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அதில் உப்பு, 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
பருப்பு வெந்ததும், அதை கடையவும். கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதில் ஊற்றி பரிமாறவும்.