வறுத்த பருப்பு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

காய்ந்த மிளகாய் - 4

தனியா - 1 தேக்கரண்டி

பூண்டு - 4 பற்கள்

கறிவேப்பிலை - 10 இலைகள்

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய்- தேவையான அளவு

\உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவைப் போட்டு வறுக்கவும்.

அத்துடன் துவரம் பருப்பைச் சேர்த்து வறுக்கவும்.

பருப்பு சிவந்ததும் பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதக்கிய கலவையுடன் உப்பு சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

கொதித்த கலவையைக் குக்கரில் மாற்றி வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் எடுத்துக் கடைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பருப்புக் கலவையில் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: