வறுத்தரைத்த பூண்டு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பூண்டு - பெரியது 1 அல்லது 15 பல்

மிளகாய் வற்றல் - 4

புளி - எலுமிச்சை அளவு

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

வெங்காயம் - 1 (விரும்பினால்)

தக்காளி - 1 (விரும்பினால்)

சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பூண்டை உரித்து, பெரியதாக இருந்தால் நீளவாக்கில் கட் செய்து கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், பூண்டு, தேங்காய் துருவல், வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் விரும்பினால் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளலாம்.

ஆறியவுடன் மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும். புளி, உப்பு கரைத்து அரைத்த பூண்டு கலவையுடன் கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, சாம்பார் பொடி போட்டு உடன் கரைத்த கலவையை விட்டு நன்றாக கொதி வந்ததும் சிம்மில் வைத்து, குழம்பு மணம் வந்து எண்ணெய் தெளிந்து இறக்கவும். கடலைப்பருப்பு சேர்ப்பதால் அடியில் உரையும். அடிக்கடி கிளறி விடவும்.

குறிப்புகள்:

இதனை சாதம், இட்லி, தோசை உடன் பரிமாறலாம்.