வத்தல் மாங்காய் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாங்காய் வற்றல் - 5 துண்டுகள்

சிறிய வெங்காயம் - 15

பூண்டு - 10

பெரிய தக்காளி - 1

புளி - சிறிய எலுமிச்சை அளவு

வெல்லம் - 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சீரக தூள் - 1 தேக்கரண்டி

மல்லி தூள் - 3 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

நல்லெண்ணெய் - 60 மில்லி லிட்டர்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மாங்காய் வற்றலை சுடு தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து பின் ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

புளியையும் ஊற வைத்துக் கொள்ளவும்.

தக்காளியை கழுவி விட்டு மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அடித்து இரண்டு ஸ்பூன் அளவு தனியே எடுத்து வைக்கவும். அந்த மிக்ஸியிலேயே ஐந்து பல் பூண்டும், மிளகாய்த்தூள் தவிர்த்து இதர மசாலாத் தூள்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

மீதி பூண்டையும், வெங்காயத்தையும் இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை கரைத்து அந்த தண்ணீரில் அரைத்த மசாலாவையும், தேவையான உப்பும் போட்டு கரைத்து கொள்ளவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போடவும்.

அதில் நறுக்கின வெங்காயம், பூண்டு, வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பின்பு எடுத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை அதனுடன் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும், மாங்காய் வற்றலையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பின்பு கரைத்து வைத்திருக்கும் புளி மசாலா கரைசலை ஊற்றி சிறிது தண்ணீரும் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அடுப்பை சிம்மிலேயே வைத்து கொதிக்கவிடவும்.

எண்ணெய் மிதந்து கத,கதவெண்று வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: