வத்தல் குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
கொத்தவரங்காய் வத்தல், கத்திரிக்காய் வத்தல், மாங்காய் வத்தல் இவை அனைத்தும் சேர்த்து - 1 1/2 கப்
நாட்டு வெங்காயம் - 1/2 கப்
பூண்டு - 10 பல்
சீரக பொடி - 1 தேக்கரண்டி
மிளகு பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 மேசைக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நல்லெண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வத்தல்களை சுடுத் தண்ணீரில் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். வெங்காயத்தையும் பூண்டையும் தோல் நீக்கி வைக்கவும். பச்சைமிளகாயை கீறி வைக்கவும்.
புளியை ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கரைத்து அதில் சீரகம், மஞ்சள், மிளகு, மல்லிதூள், உப்பு ஆகியவற்றை போட்டு கலக்கி வைக்கவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெந்தயம் போடவும். வெந்தயம் சிவந்ததும் கடலைப்பருப்பு, உளுந்து போட்டு சிவந்தும் வெங்காயத்தையும் பூண்டையும் போடவும்.
நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாயை போட்டு வதக்கி அதில் மிளகாய்பொடி போடவும்.
பின்பு வத்தல்களை பிழிந்து போட்டு நன்றாக கிளறவும். பின்பு கறிவேப்பிலையை அதில் சேர்த்து புளிக்கலவையை அதில் ஊற்றவும்.
பின்பு மூடி வைத்து சீரான தீயில் வேகவிடவும். வத்தல்கள் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.