வத்தல் குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
வெங்காயம் - 2
தேங்காய் - 3 அல்லது 4 துண்டு
சாம்பார்ப்பொடி அல்லது வற்றல் குழம்பு மசாலா - 2 மேசைக்கரண்டி
மணத்தக்காளி வற்றல் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறுதுண்டு
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
புளிகரைசல் - 1/2 கப்
மல்லித்தழை - சிறிது
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்
வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி, பெருங்காயம் சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து வாணலியை மூடி விடவும். அவ்வப்பொழுது கிளறி விடவும்.
வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும், சாம்பார் பொடி அல்லது வற்றல் குழம்பு பொடி, உப்பு சேர்க்கவும்.
புளிகரைச்சல் சேர்க்கவும். அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
கலந்து விட்டு கொதி வந்ததும் சிம்மில் வைக்கவும்.
எண்ணெய் பிரிந்ததும் வற்றலை பொறித்து சேர்க்கவும்.
நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.
இந்த வற்றல் குழம்பு நீர்க்க இருக்காது, கெட்டியாக இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும்