வடைக்குழம்பு
தேவையான பொருட்கள்:
மசாலாவடை - 15
வெங்காயம் - 2
தக்காளி - 2
புளிக்கரைச்சல் (கெட்டியாக) - 1 கப்.
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
வடகம் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளிக்கரைச்சலுடன், உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி மற்றும் தனியா தூளை சேர்த்து கலந்து, அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை அரிந்துக் கொள்ளவும். சிறிது வெங்காயம் மற்றும் 5 பல் பூண்டை அம்மியில் அல்லது மிக்ஸியில் பாதி பாதியாக அரைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வடகம் போடவும். வெடித்தவுடன் கறிவேப்பிலை போட்டு வதக்கி பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் வெங்காயம் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் கலந்து வைத்துள்ள புளிக்கரைசல் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதிக்கும் குழம்பில் மசாலாவடையை போட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.