ரேஸ் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

பச்சரிசி - 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 5

சீரகம் - 1/2 தேக்கரண்டி

புளி - சின்ன லெமன் அளவு

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

காய்கறி வெண்டைக்காய் அல்லது கத்திரிக்காய் - 1 கப்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே கொடுத்துள்ள மிளகாய், பச்சரிசி, உளுத்தம்பருப்பு மூன்றையும் வெறும் கடாயில் சிவப்பாக வறுத்து வைக்கவும்.

ஆறியவுடன் சீரகம் சேர்த்து அரைத்து எடுத்து வைக்கவும்.

புளியை கரைத்து அடுப்பில் கொதிக்க விடவும் உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.

வெண்டைக்காயை நறுக்கி சேர்க்கவும். பத்து நிமிடம் கொதித்தவுடன் வறுத்ததை சேர்த்து பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி பரிமாறவும்,

குறிப்புகள்: