ரிச் மசூர் டால்
தேவையான பொருட்கள்:
மசூர் டால் (மைசூர் பருப்பு) - 1/4 கப்
பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு வகை கீரை - 1/2 கப்
நசுக்கிய பூண்டு - 6
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தக்காளி - 1
புளி - நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க: (அல்லது) வறுத்து பொடிப்பதற்கு பதிலாக ரசப்பொடி - 2 தேக்கரண்டி பயன்படுத்தலாம்.
தனியா - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
வறுத்து பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் வறுத்து குருணையாக பொடித்துக் கொள்ளவும் அல்லது ரசப்பொடியை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து 1 கப் அளவுக்கு புளிக்கரைசல் எடுத்து வைக்கவும்.
பருப்பை 3 கப் நீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். இறக்குவதற்கு 5 நிமிடம் முன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வேக விடவும். (பொதுவாக மைசூர் பருப்பு விரைவில் வெந்து விடும்)
பிறகு பருப்பில் உள்ள தக்காளியை கரண்டியால் மசித்து அதனுடன் புளிக்கரைசல், உப்பு மற்றும் பொடியையும் சேர்த்து கலக்கவும்.
வாணலியை எண்ணெயுடன் சூடேற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின் நறுக்கிய கீரை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இறுதியாக பருப்புக் கரைசலை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்
குறிப்புகள்:
சூடான சாதத்துடன் பரிமாறவும்.