ராஜ்மா குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ராஜ்மா - 1 கப்

பட்டை - ஒரு அங்குலம் அளவு

கிராம்பு - 2 1

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்

நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

கறிவேப்பிலை - 1 இனுக்கு

சாம்பார் பொடி - 1 1 /2 தேக்கரண்டி

தேங்காய் - 1/4 மூடி

நல்லெண்ணைய் - 1 தேக்கரண்டி

உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை:

முதலில் ராஜ்மாவை இரவே ஊறவைக்கவேண்டும்.

பின் குக்கரில் 10 நிமிடம் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவேண்டும்.

பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை,கிராம்பு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பார் பொடி சேர்த்து வதக்கி உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்த ராஜ்மாவை போடவும்.

பின் தேங்காயை அரைத்து கொதிக்கும் ராஜ்மா குழம்பில் ஊற்றி நல்லெண்ணைய் விட்டு 2 நிமிடம் ஆனதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: