மோர் குழம்பு (8)
தேவையான பொருட்கள்:
புளித்த மோர் - 1/4 லிட்டர்
பச்சை மிளகாய் - 3
தேங்காய் - 2 கீற்று
பச்சரிசி - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
சீரகம் - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
பொரிக்கடலை - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காய் கீற்று, பச்சைமிளகாய், பச்சரிசி, மிளகாய் வற்றல், சீரகம், வறுத்த துவரம்பருப்பு, பொரிக்கடலை ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்து மோருடன் கலந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
பிறகு அதில் மோர்க்கலவையை ஊற்றி சிறிது மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு போட்டு வேக விடவும்.
இதனோடு வெண்டைக்காய், சௌசௌ போன்ற காய்களையும் சேர்த்து வேக வைக்கலாம். வடை சுட்டும் இதில் போடலாம்.
கொதிப்பதற்கு நுரை கூடிக் கொண்டு வரும் பொழுது இறக்கி பரிமாறவும். நீண்ட நேரம் கொதிக்க விடக்கூடாது.