மோர் குழம்பு (6)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மோர் - 4 கப்

பூசணிக்காய் - ஒரு கீற்று

கடலைப் பருப்பு - 1/2 மேசைக்கரண்டி

துவரம் பருப்பு - 1/2 மேசைக்கரண்டி

தனியா - 1/2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 6

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 1/2 கப்

இஞ்சி - சிறுதுண்டு

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

மிளகாய் வற்றல் - 2

பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தண்ணீர் - 2 1/2 கப்

எண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி

கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியா இவை மூன்றையும் ஒன்றாய் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு, தண்ணீர் ஊற்றி சுமார் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.

பூசணிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அவற்றை இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 5 நிமிடம் வேக வைக்கவும்.

துருவின தேங்காய், பச்சை மிளகாய், ஊற வைத்த பருப்பு, மிளகு, சீரகம் இவை எல்லாவற்றையும் சேர்த்து கரகரப்பாக அரைத்து அதில் இஞ்சியை தட்டி போடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும்.

அதில் கரைத்து வைத்துள்ள மோரை ஊற்றி, அத்துடன் அரைத்து வைத்துள்ள கலவையையும் சேர்த்து கலக்கிவிட்டு ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்.

பின்னர் வேகவைத்து எடுத்துள்ள பூசணிக்காய் துண்டங்களைப் போட்டு கிளறி மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.

குழம்பு வெந்தவுடன், பொங்கி நுரைத்து வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: