மோர் குழம்பு (2)
0
தேவையான பொருட்கள்:
புளித்த மோர் - 1 1/2 கப்
கடுகு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு நன்கு வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு புளித்த மோரை ஊற்றி கிளறிவிட்டு, 2 நிமிடங்கள் கழித்து குழம்பு கொதிக்கும் முன் இறக்கி பரிமாறவும்.