மோர் குழம்பு மற்றொரு வகை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளிக்காத மோர் - 2 கப்

அரிசி - 1/2 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 3 பல்

பச்சை மிளகாய் - 2

தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 1

தக்காளி - 1

கத்தரிக்காய் - 100 கிராம்

மஞ்சள் தூள் - தேவையான அளவு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியையும், பருப்பையும் 45 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

பிறகு ஊறவைத்த அரிசி பருப்புடன் மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும்.

மோரை நன்கு கரைத்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் அரைத்ததை சேர்த்து கரைத்து வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு தாளிக்கவும்.

நறுக்கிய தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். பின்பு வில்லையாக நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.

காய் வெந்ததும் கரைத்து வைத்த மோரை ஊற்றி 5 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: