மோர்க் குழம்பு (1)
0
தேவையான பொருட்கள்:
புளித்த மோர் - 2 டம்ளர்
துவரம் பருப்பு - 1 கைப்பிடி
தேங்காய் துருவல் - 1/4 மூடி
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
பெருங்காயம் - சிறிது
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனுடன் தேங்காய், மிளகாய், சீரகம், தனியா, பூண்டு, பெருங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அரைத்த மசாலாவை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
கெட்டியாக வரும் போது கடைந்த மோரை ஊற்றவும்.
நுரைத்து வந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.