மோர்க் குழம்பு
தேவையான பொருட்கள்:
புளித்த மோர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
குழம்பில் போட காய்கறிகள்:
கத்தரி, வெண்டை, பூசணி, முருங்கை, கேரட் - ஏதாவது ஒன்று சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
துவரம்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வறுத்து அரைக்க:
பெருங்காயம் - சிறு துண்டு
உளுத்தம் பருப்பு - 3/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
தனியா - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணை - 4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது
செய்முறை:
துவரம்பருப்பு மற்றும் சீரகத்தை சிறிதளவு நீரில் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு அதில் பெருங்காயம் போட்டு பொரிந்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகாய் வற்றலை தனித்தனியாக சிவக்க வறுத்து எடுக்கவும். கடைசியாக தேங்காய்த் துருவல் போட்டு அதையும் சிவக்க வறுத்து எல்லாவற்றையும் ஊற வைத்துள்ள பருப்பு, சீரகமும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
எடுத்துக் கொண்ட காய்கறியை சிறிய துண்டங்களாக நறுக்கி, எண்ணையில் சிறிது உப்பு, மஞ்சள் பொடி போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
மோரில் அரைத்த விழுது, வதக்கிய காய், தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கேஸில் வைக்கவும்.
குழம்பு பொங்கி வந்ததும் இறக்கி தேங்காய் எண்ணையில் கடுகு தாளித்து குழம்பில் கொட்டி. கொத்துமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்து பரிமாறவும். கொதிக்க விடக் கூடாது. குழம்பு நீர்த்து விடும்.