மோர்க்குழம்பு (1)





தேவையான பொருட்கள்:
மிதமாக புளித்த மோர் - 2 கப்
வேகவைத்த வெள்ளைப்பூசணி - 4 சிறிய துண்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 7
சீரகம் - 1/2 தேக்கரண்டி
ஊறவைத்த துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
சின்ன வெங்காயம் - 1
செய்முறை:
அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
பின் அதனை கடைந்த மோரில் கொட்டவும். கடைந்த மோரில் அரைத்த விழுது, வேகவைத்த வெள்ளைப்பூசணி, மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
பின் மிதமான அனலில் வைக்கவும். லேசாக பொங்க ஆரம்பித்தவுடன் இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.