மோர்குழம்பு கோவ்தா





தேவையான பொருட்கள்:
புளித்த மோர் - 1/2 லிட்டர்
கோஸ் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
கடலை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் - 2 மேஜைகரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை:
துவரம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், தனியா இவைகளை சிறிது நீரில் ஊற வைக்கவும். பின்பு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
கோஸ், வெங்காயம் இரண்டையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து 5நிமிடங்கள் பிசையவும்.
கோஸ், வெங்காயத்தில் தண்ணீர் இருப்பதால் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
பக்கோடா பதத்தில் மாவு இருக்கும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
பக்கோடா மாவை கிள்ளி கிள்ளி எண்ணெயில் போட்டு சிறிது சிவந்த உடன் பொரித்து எடுத்து வைக்கவும்.
கோவ்தா ரெடி.
புளித்த மோரில் மஞ்சள் பொடி, அரைத்த விழுது, உப்பு, சேர்த்து கொதிக்க விடவும்.
மோர் பொங்கி வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
இத்துடன் பொரித்தெடுத்த கோவ்தாவை சேர்க்கவும்.
கடைசியாக கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்து பரிமாறவும்.