மொச்சை பயிறு குழம்பு
தேவையான பொருட்கள்:
மொச்சை பயிறு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - சிறிது
சீரகம் - சிறிது
உளுந்து - சிறிது
கடலை பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
அரைக்க:
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
முந்திரி - 4
பாதாம் - 4
செய்முறை:
அரைக்க கொடுத்தவற்றை தேவைக்கு தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
பயிறை இரவே ஊற வைத்து வேக வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் அரைத்த மசாலா, தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, வேக வைத்த பயிறு, தேவையான நீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு எண்ணெய் மேலே திரண்டு வரும்போது எடுத்து பரிமாறவும்.