மொச்சை கொண்டைக்கடலை தீயல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 1/4 கப்

மொச்சை - 1/4 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 15

மிளகு - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லி தூள் - 2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

புளி - சிறிய எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை - 2 கொத்து

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மொச்சை மற்றும் கொண்டைக்கடலையை 4 மணிநேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு சேர்த்து 30 விநாடிகள் கழித்து 6 அல்லது 7 சின்ன வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும்.

தேங்காய் நன்றாக பிரவுன் நிறம் வரும் வரை வதக்கவும். (மிதமான தீயில் வைத்து இடையிடையே கிளறினால் போதும்)

தீயை நன்றாக குறைத்து வைத்து விட்டு மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து 5 விநாடிகள் கிளறி அடுப்பை அணைத்து விடவும். வாணலியின் சூட்டிலேயே பொடிகள் வறுபட்டு விடும்.

வறுத்த பொருட்கள் ஆறியதும் மிக்ஸியில் போட்டு முதலில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்து விட்டு பின்னர் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

குழம்பு செய்யும் பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை, மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இரண்டு, மூன்று நிமிடங்கள் வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.

வேக வைத்த மொச்சை மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.(கடலை வேக வைத்த தண்ணீர் கசப்பில்லாமல் இருந்தால் அதையும் சேர்க்கவும்)

பின்னர் அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலந்து உப்பு, புளி சரி பார்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதி வந்து 5 நிமிடம் கொதித்ததும் தீயைக் குறைத்து மூடி போட்டு கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சுண்டை வற்றல் மட்டும் சேர்த்து செய்யும் தீயலை சாதத்தில் கிளறி கட்டுச்சோறாக பயணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கைப்படாமல் இருந்தால் இரண்டு நாட்கள் இருக்கும்.

சாதத்திற்கு மட்டுமல்ல இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். பயணத்திற்கு சுண்டை வற்றல் சேர்த்து செய்த தீயல் எடுத்துக் கொண்டால் சாதம் இட்லி எல்லாவற்றிற்கும் தொட்டுக் கொள்ளலாம்.

சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையான மொச்சை கொண்டைக்கடலை தீயல் தயார்.