மொச்சை குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
மொச்சை - 1 கப்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது
சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய் - 1/2 கப் துருவியது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மொச்சையில் ஒரு கரண்டி உப்பு போட்டு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஊற வைத்த மொச்சையை குக்கரில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை நீளநீளமாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சோம்பு, கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயத்தை போட்டு வதக்கவும். தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி, மல்லிப் பொடி போட்டு வதக்கவும்.
அதனுடன் புளியை கரைத்து ஊற்றவும். பின்னர் வேகவைத்த மொச்சையை போட்டு வதக்கவும்.
பின்னர் அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். தேங்காயுடன் சீரகம் சேர்த்து அரைக்கவும்.
குழம்பு கொதித்ததும் அரைத்த விழுதைப் போட்டு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
எல்லாம் நன்கு கொதித்ததும் கறிவேப்பில்லை சேர்த்து இறக்கி பரிமாறவும்.