மொச்சை காரக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மொச்சை - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 1/2 கப்

பூண்டு - 1/2 கப்

புளி - எலுமிச்சை அளவு

மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி

தனியாதூள் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க:

மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

தக்காளி - 4

செய்முறை:

மொச்சையை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்து, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.

புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும். தக்காளி, மல்லித்தழை, கறிவேப்பிலை, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம், பூண்டு நன்கு வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

இதனுடன் மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்.

பின்னர் புளி தண்ணீர், சிறிது உப்பு, வேக வைத்த மொச்சை சேர்த்து நன்கு பச்சைவாசனை போக கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை அரைத்து சேர்ப்பதால் வழக்கமான கார குழம்பைவிட வித்தியாசமான சுவையில் இருக்கும்.

சாதத்துடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும்.